10-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் கைது
ஆவடி அருகே 10-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;
கோப்புப்படம்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியிடம் 18 வயது வாலிபர் ஒருவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், சிறுமிக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி பாலியல் சீண்டலுக்கு ஆளானது தெரிய வந்தது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் பட்டாபிராம் அனைத்து மகளிர் போலீசார் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.