கோவையில் பெண்ணுக்கு விநோதமான டார்ச்சர் கொடுத்த தனியார் நிறுவன உரிமையாளர் கைது

கோவையில் ஒரு தனியார் நிறுவன உரிமையாளர், ஒரு பெண்ணின் டெலிவரி முகவரியில் ஆபாசமான வார்த்தைகளை புனைப்பெயராக சேர்த்து 100க்கும் மேற்பட்ட பார்சல்களை அனுப்பியுள்ளார்.;

Update:2025-12-17 15:56 IST

கோவையைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 39) என்பவர் ஒரு தனியார் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது நிறுவனத்தில் முன்னர் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணுக்கு 100க்கும் மேற்பட்ட பார்சல்களை 'Cash on Delivery' மூலம் தினமும் ஆன்லைனில் ஆர்டர் செய்து அனுப்பியுள்ளார்.

மேலும் அவர் டெலிவரி விலாசத்தில் அந்த பெண்ணின் பெயருடன் ஆபாசமான வார்த்தைகளை புனைப்பெயராக சேர்த்தும் ஆர்டர் செய்து அந்த பெண்ணுக்கு விநோதமான முறையில் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து இதுதொடர்பான புகாரின்பேரில் கோவை சைபர்கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, தனியார் டிஜிட்டல் நிறுவனத்தின் உரிமையாளரான சதீஷ்குமாரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்