திருப்பரங்குன்றம் விவகாரம்; தவெக நிலைப்பாடு என்ன? அருண்ராஜ் விளக்கம்

திருப்பரங்குன்றம் விவகாரம் தேவையில்லாத பிரச்னை என்று தவெக தெரிவித்துள்ளது.;

Update:2025-12-17 17:03 IST

சென்னை,

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் மவுனம் காப்பதாகவும், அரசியலில் அமைதியாக இருக்க கூடாது என்று பாஜ்கா முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், தவெக நிர்வாகி அருண்ராஜ், அண்ணமாலை விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். இது தொடர்பாக அருண் ராஜ் கூறியதாவது: அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் சகோதர மனப்பான்மை உடன், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு இருக்கிறது

திருப்பரங்குன்றத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் இதுதான் நிலைமை. மதுரை கள்ளழகர் திருவிழாவில் அழகர் ஊர்வலம் வரும் போது இஸ்லாமிய சகோதரர்கள் அதனை வழிபட செய்கின்றனர். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அங்குள்ள வாவர் மசூதிக்கு செல்கின்றனர்; திருப்பரங்குன்றம் விவகாரம் தேவையில்லாத பிரச்னை தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை உடன் தான் இருக்கிறார்கள்; இதில் ஆதாயம் தேட பாஜகவும். திமுகவும் முயல்கின்றன” என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்