நடிகர் விஜய் மீண்டும் மக்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும்-கிருஷ்ணசாமி பேட்டி
ஆளுங்கட்சியினர் நடிகர் விஜயைப் பார்த்து அஞ்சுகின்றனர் என்று கிருஷ்ணசாமி கூறினார்.;
தென்காசி,
தென்காசி தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு மதுரையில் வருகிற ஜனவரி மாதம் 7-ந்தேதி நடக்கிறது. கரூரில் மிகவும் குறுகலான பகுதியில் நடிகர் விஜய் பிரசாரம் செய்ததால்தான் நெரிசலில் சிக்கி 41 பேர் உயரிழந்தனர்.
அவர் மக்களை சந்தித்து பேசுவதற்கு சரியான இடத்தை தமிழக அரசு ஒதுக்கி தரவில்லை. ஆளுங்கட்சியினர் நடிகர் விஜயைப் பார்த்து அஞ்சுகின்றனர். கரூர் சம்பவத்தில் இருந்து நடிகர் விஜய் மீண்டு வந்து பொதுமக்களை சந்திக்க வேண்டும். அவர் மீண்டும் மக்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும். அவருக்கான உரிமைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.