ஐப்பசி மாத பவுர்ணமி: தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

தூத்துக்குடியில் உள்ள தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.;

Update:2025-11-06 03:09 IST

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. அதன் பின்பு குமாரர் தெரு பச்சை சாத்து அன்பர்கள் குழு சார்பில் பெண்கள் கலந்து கொண்ட 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையை கோவில் பிரதான பட்டர்கள் சிவா மற்றும் குரு ஆகியோர் செய்தனர். பின்னர் பெண்கள் அனைவருக்கும் மாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பச்சைசாத்து குழு நாகராஜன், வழக்கறிஞர் சுப்பிரமணியன், ராமலிங்கம், கோவில் அறங்காவலர்கள் செல்வசித்ரா, அறிவழகன், மகாராஜன், பாலகுருசாமி, திருவிளக்கு கமிட்டி பொருளாளர் பாலு, நைனா, செயலாளர் மீனாட்சிநாதன் உள்பட பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்