உதகையில் நாளை அனைத்து சுற்றுலா தளங்களும் மூடல்

கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு அதி கன மழைக்கான "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2025-05-28 20:31 IST

சென்னை,

தமிழகம் உள்பட தென்மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.

இதனிடையே கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு  நாளையும், நாளை மறுநாளும் அதி கன மழைக்கான "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் உதகையில் நாளை அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்படுவதாகவும், உதகை கூடலூர் தேசிய நெடுஞ்சாலைகள் இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் . 

Tags:    

மேலும் செய்திகள்