டி.டி.வி.தினகரனுக்கு அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து

டி.டி.வி.தினகரன் நூறாண்டு வாழ்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-13 17:11 IST

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;-

“இன்று 62-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்