கோவை: காட்டு யானை தாக்கி படுகாயமடைந்த கூலி தொழிலாளி உயிரிழப்பு

இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-12-13 17:15 IST

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் மாரி சாமி என்கிற ராஜன். நேற்று அதிகாலை அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு மாரி சாமி சென்றபோது அவரை காட்டு யானை ஒன்று தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த அவர் மேட்டுபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

வனவிலங்களுகள் வனப்பகுதியில் இருந்து கிராம பகுதிகளுக்குள் நுழையாமல் இருப்பதற்கான பணிகளை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும். மேலும் வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அகழியை ஆழப்படுத்த வேண்டும் எனவும் அங்குள்ள பொதுமக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்