சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு ஜூலை 14-க்குள் விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

தமிழகத்தில் தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் ஊக்கத் தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-12 22:12 IST

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் "சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு தலா 1 கோடி ரூபாய் ஊக்கத் தொகையுடன் கூடிய சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள் வழங்கப்படும். உரிய செயல்திறன் அளவீடுகள் மற்றும் நல்லிணக்க தரவுகள் மூலம் இந்த ஊராட்சிகள் தேர்வுச் செய்யப்படும்" என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகள் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுகள் பெற உரிய படிவத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்று ஜூலை 14-க்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்