பாலியல் குற்றங்கள் திருவண்ணாமலையில் அதிகமாக நடக்கிறதா..? - அமைச்சர் ரகுபதி பதில்

சிறைவாசிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது தான் இந்த அரசின் நோக்கம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.;

Update:2026-01-22 11:36 IST

சென்னை,

தமிழக சட்டசபையின் 3ம் நாள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

இதன்படி கேள்வி நேரத்தின் போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலையில் மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப கிளை சிறைகளின் எண்ணிக்கை மற்றும் சிறைவாசிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, “சிறைவாசிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது தான் இந்த அரசின் நோக்கம். சிறைவாசிகள் அதிகம் பேர் இருக்க கூடாது. திருந்தியவர்கள் அதிகம் இருக்க வேண்டும் அவர்களை நல்வழிபடுத்த வேண்டும் என்பது தான் முதல்-அமைச்சரின் எண்ணம், செயல், சிந்தனை.

பாலியல் குற்றங்கள் திருவண்ணாமலையில் அதிகம் என்பது உண்மைக்கு புறம்பானது. தமிழகத்தில் 9 மத்திய சிறைச்சாலைகள், 13 மாவட்ட சிறைச்சாலைகள், 82 கிளை சிறைச்சாலைகள், 8 பெண்கள் சிறைச்சாலைகள், 3 திறந்தவெளி சிறைச்சாலைகள் உள்ளது. தமிழகத்தில் 23 ஆயிரத்து 783 சிறைவாசிகள் இருக்க அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 21, 558 சிறைவாசிகள் உள்ளனர்” என்று அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்