தாயை பிரிந்த குட்டி யானை: மீண்டும் சேர்த்துவைக்க வனத்துறை தீவிர முயற்சி

தாயிடம் இருந்து பிரிந்து தனியாகச் சுற்றி திரிந்த ஆண் யானை குட்டி ஒன்று வனத்துறையினரால் மீட்கப்பட்டது.;

Update:2025-05-31 18:47 IST

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பவானி சாகர் நீர்த்தேக்கப் பகுதியில், கடந்த 27-ந்தேதி தாயிடம் இருந்து பிரிந்து தனியாகச் சுற்றி திரிந்த 9 மாத ஆண் யானை குட்டி ஒன்று வனத்துறையினரால் மீட்கப்பட்டது.

வனப்பகுதியில் வழக்கம்போல் கண்காணிக்க சென்ற வனத்துறையினர், குட்டியை தனியாகக் இருந்த அந்த குட்டியை பாதுகாப்பாக மீட்டனர். குட்டிக்கு சுமார் 9 மாதங்கள் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறினர்.

மீட்கப்பட்ட யானை குட்டி உடல் சோர்வுடன் காணப்பட்டதால், கோவை வன கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழு, அதற்குத் தேவையான சிகிச்சைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குளுக்கோஸ், இளநீர், மற்றும் புரதச்சத்துக்கள் வழங்கி வருகின்றனர்.

அந்த குட்டியை அதன் தாயுடன் மீண்டும் இணைக்க சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையில் தனிப்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, தாய் யானையைக் கண்டறியும் பணி 5-வது நாளாக தீவிரமாக நடந்து வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்