சுருளி அருவியில் குளிக்க 9-வது நாளாக தடை - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

மேகமலை, ஈத்தக்காடு வனப்பகுதியில் பெய்த தொடர் மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.;

Update:2025-10-26 19:43 IST

தேனி,

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் வருடம் முழு வதும் நீர்வரத்து இருக்கும். இதனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வருகின்றனர்.

மேலும் அமாவாசை உள்ளிட்ட புனித நாட்களில் முன்னோர்களுக்கு அருவி கரையோரம் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மேகமலை, ஈத்தக்காடு வனப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், மழை தொடர்ந்து பெய்து வருவதால் அருவியில் நீர்வரத்து சற்றும் குறையாமல், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக சுருளி அருவியில் குளிக்க 9-வது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்