மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.;

Update:2025-05-26 18:59 IST

கோப்புப்படம்

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வது வழக்கம்.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் கனமழை பெய்கிறது.

இதனால் மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் மக்கள் குளிக்க, நீர்நிலைக்கு அருகே செல்ல, மணிமுத்தாறு அருவியை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்