பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பணியிடை நீக்கம்
பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.;
கோப்புப்படம்
கோவை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் ரூபா குணசீலன். பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், துணைவேந்தர் பணிகளை துணைவேந்தர் பொறுப்பு குழு கவனித்து வருகிறது. பாரதியார் பல்கலைக்கழக பதிவாளராக ரூபா குணசீலன் பொறுப்பு வகித்து வந்தார்.
அவர் தனது பதவி காலத்தின்போது விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும், பல்கலைக்கழக நிதிக்குழு மற்றும் சிண்டிகேட் ஒப்புதல் இன்றி பணிகளை மேற்கொண்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய பதிவாளராக ராஜவேல் நியமிக்கப்பட்டார். ரூபா குணசீலன் மீதான புகார் குறித்து விசாரிக்க கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பார்த்தசாரதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து ரூபா பேராசிரியர் குணசீலனை பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழக பதிவாளர் ராஜவேல் நடவடிக்கை எடுத்துள்ளார்.