சென்னை துறைமுகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

துறைமுகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர்.;

Update:2025-08-22 00:23 IST

சென்னை,

சென்னை ரிசர்வ் வங்கி எதிரே உள்ள சென்னை துறைமுகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இது குறித்து துறைமுக அலுவலர்கள் அளித்த புகாரின்பேரில் துறைமுகம் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

துறைமுகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. பின்னர்தான் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதுபற்றி துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்