திருப்பதி போல் திருச்செந்தூர் கோ​விலில் விரைவில் பிரேக் தரிசனம் - அமைச்சர் சேகர் பாபு தகவல்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என சேகர் பாபு தெரிவித்தார்.;

Update:2025-09-05 16:02 IST

தூத்துக்குடி,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. மேலும் சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. நாள்தோறும் திருச்செந்தூர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

இந்த நிலையில், திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த விரைவில் பிரேக் தரிசனம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் விழாவை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

“திருவண்ணாமலையில் முதலில் விரைவு தரிசன முறையை தொடங்க உள்ளோம். திருச்செந்தூரில் பணிகள் அனைத்து நிறைவடைந்த பிறகு, இங்கும் விரைவு தரிசனம் மற்றும் திருப்பதியை போல் பிரேக் தரிசனம் ஆகியவற்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்