தூத்துக்குடியில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு: 2 பேர் கைது

தூத்துக்குடியில் நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த 3 கார்கள், லோடு வேன் ஆகிய வாகனங்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.;

Update:2025-11-08 03:15 IST

தூத்துக்குடி அண்ணாநகர் 2வது தெருவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த 3 கார்கள், லோடு வேன் ஆகிய வாகனங்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதுபோல் டி.எம்.பி. காலனியில் சாலையோரம் நிறுத்தியிருந்த டூரிஸ்ட் பஸ், மில்லர்புரம் கணேசன் காலனியில் 3 ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.

இதுகுறித்து வாகனங்களின் உரிமையாளர்கள் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் விசாரணை நடத்தியதில், அண்ணாநகர் 3வது தெரு, பிரையன்ட்நகர் 7வது தெருவை சேர்ந்த இளம்சிறார்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்