கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு வெடித்ததில் கட்டிடம் இடிந்து விழுந்தது

கட்டிடத்துக்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.;

Update:2025-10-20 21:54 IST

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் காலையிலே எழுந்து, குளித்து, புத்தாடைகளை உடுத்தி, இனிப்பு மற்றும் பலகாரங்களை உண்டு, வாழ்த்துகளை பரிமாறி, தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுவர்கள் பட்டாசு வெடித்தபோது கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தியாகதுருகம் அருகே உள்ள கூத்தக்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான பொருட்கள் மற்றும் உபகரணங்கள் அருகில் உள்ள கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்தப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் இன்று பட்டாசு வெடித்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு பட்டாசு, அந்த கட்டிடத்திற்குள் விழுந்ததாக தெரிகிறது. இதில் அந்த கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து சேதமானது. இருப்பினும் அங்கு யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த கோவிலுக்கு சொந்தமான உபகரணங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்