நாகர்கோவிலில் பராமரிப்பு பணி: 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.;
கோப்புப்படம்
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்காலிகமாக கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. அதன் விவரம் வருமாறு:-
* தாம்பரத்தில் இருந்த புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.22657) கன்னியாகுமரி வரை செல்லும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22658) கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.
* மங்களூரு சென்டிரலில் இருந்த புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16649), கன்னியாகுமரி வரை செல்லும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மங்களூரு சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16650), கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.
* தாம்பரத்தில் இருந்த புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12667), கன்னியாகுமரி வரை செல்லும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12668), கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.
* சென்னை சென்டிரலில் இருந்த புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12689), கன்னியாகுமரி வரை செல்லும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12690), கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.
* நாகர்கோவிலில் இருந்து நெல்லை செல்லும் ரெயில் (56707), கன்னியாகுமரியில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரெயில் (56708), கன்னியாகுமரி வரை செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.