கரூர் கூட்ட நெரிசல்: சம்பவ இடத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்;

Update:2025-12-01 17:26 IST

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் குழுவினர் கரூரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த குழுவின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, ஜிஜிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் மேற்பார்வை செய்கின்றனர்.

இதனிடையே, சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, ஜிஜிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் இன்று கரூர் வந்துள்ளனர்.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் நடந்த பகுதியில் சிபிஐ டிஐஜி அதுல் குமார் தாகூர் தலைமையிலான அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். சிபிஐ அலுவலகம் சென்ற சிபிஐ டிஐஜி அதுல் குமார் தாகூர் தலைமையிலான அதிகாரிகள்

வழக்கு விசாரணையின் நிலை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான மூவர் குழு கரூர் வந்துள்ள நிலையில் சிபிஐ டிஐஜி அதுல் குமாரின் ஆய்வு நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்