விடுதியில் இளம்பெண் வெட்டிக்கொலை: கள்ளக்காதலால் திசைமாறிய வாழ்க்கை.. வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
நான் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கோவையில் கட்டிட வேலை பார்த்தபோது கணபதியை சேர்ந்த ஸ்ரீபிரியாவுடன் பழக்கம் ஏற்பட்டது.;
நெல்லை,
நெல்லை மாவட்டம் தருவையை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 34), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவை கணபதியை சேர்ந்த ஸ்ரீபிரியா (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 1½ வயதில் மகள் உள்ளனர். பாலமுருகன் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் சொந்த ஊரில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். கணவன்-மனைவி இடையே மகிழ்ச்சியாக சென்ற வாழ்க்கை, கள்ளக்காதல் காரணமாக திசைமாறி சென்றது.
ஸ்ரீபிரியாவிற்கும் பால முருகனின் உறவுக்கார வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த பாலமுருகன் மனைவியை கண்டித்தார். இதனால் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்படவே ஸ்ரீபிரியா தனது குழந்தைகளுடன் கோவைக்கு வந்தார்.பின்னர் குழந்தைகளை பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு காந்திபுரத்தில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருந்தார்.
நேற்று காலை இங்கு வந்த பாலமுருகன் தனது மனைவியை சந்தித்து பேசினார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்படவே பாலமுருகன், ஸ்ரீபிரியாவை அரிவாளர் வெட்டிக்கொன்றார். மேலும் உயிரிழந்த மனைவியின் உடலின் அருகே அமர்ந்து செல்பி புகைப்படமும் எடுத்து பதிவிட்டார்.
இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர். கைதான பாலமுருகன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கோவையில் கட்டிட வேலை பார்த்தபோது கணபதியை சேர்ந்த ஸ்ரீபிரியாவுடன் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். எங்களது திருமண வாழக்கை மகிழ்ச்சியாகவே சென்றது. இந்தநிலையில் எனது மனைவிக்கும் எனது உறவுக்கார வாலிபர் ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்தநான் எனது மனைவியை கண்டித்தேன். ஆனால் அவர் அதனை கேட்கவில்லை. இது எனக்கு அவமானத்தை ஏற்படுத்தியது.
இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எனது மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு கோவைக்கு வந்துவிட்டார்.
நான் அவ்வபோது எனது மனைவிக்கு போன் செய்து நாம் சேர்ந்து வாழலாம் என கூறி வந்தேன். ஆனாலும் அவர் மறுத்தார். எனது மனைவி கோவைக்கு சென்று விட்டதால் அவரையும் குழந்தைகளையும் 6 மாதங்களாக பார்க்க முடியாமல் இருந்தேன்.
இதற்கிடையே எனது மனைவியும், அவருடன் பழகி வந்த வந்த வாலிபரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் எனக்கு வந்தது. இதை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அங்கு சென்ற பின்னரும் இது தொடர்வதை நினைத்து வருந்தினேன். மனைவி, குழந்தைகளை பார்த்து 6 மாதமாகி விட்டதால் மனைவியை சந்தித்து பேசி சமாதானப்படுத்தி மீண்டும் சேர்ந்து வாழலாம் என முடிவு செய்தேன்.
இதற்காக நான் நேற்று காலை கோவைக்கு வந்தேன். நான் தனியாக சென்றால் பார்க்க மறுத்து விடுவார் என்பதால் கணபதியில் உள்ள எனது மாமா ராஜா என்பவரை அழைத்து கொண்டு எனது மனைவி தங்கி இருக்கும் விடுதிக்கு சென்றேன்.
அங்குள்ள வார்டனிடம் மனைவியை சந்திக்க வந்துள்ளதாக கூறி வரவேற்பு அறையில் காத்திருந்தேன்.
எனது மனைவி வந்ததும் அவரிடம் நாம் இனிமேல் சண்டை போடாமல் சந்தோஷமாக வாழலாம் என்னுடன் வா. சொந்த ஊருக்கு செல்வோம் என்றேன். ஆனால் அவர் வர மறுத்ததுடன் இனிமேல் உங்களுடன் வரமாட்டேன். தயவு செய்து செல்லுங்கள் என்று கூறினார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நான் இவ்வளவு கூறியும் ,மனைவி கேட்காததால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
ஏற்கனவே எனது மனைவியும் அவருடன் பழகிய வாலிபரும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை பார்த்ததால் எனக்குள் ஆத்திரம் இருந்தது. இங்கு வந்து நான் எவ்வளவோ சமாதானம் பேசி பார்த்தும் வராததால் கோபத்தின் உச்சிக்கு சென்ற நான். அரிவாளை எடுத்து ஸ்ரீபிரியாவின் கழுத்தில் வெட்டி கொன்றேன். அவர் உயிரிழந்ததை உறுதி செய்து விட்டு உறவினர்களுக்கு தெரிவிப்பதற்காக தனை ஸ்டேட்டஸ் வைத்தேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.