தென்பெண்ணை ஆற்றில் பொங்கி வரும் ரசாயன நுரை - விவசாயிகள் அதிர்ச்சி
கெலவரப்பள்ளி அணையில் இருந்து வினாடிக்கு 981 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.;
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையின் முழு கொள்ளளவான 44.28 அடியில், தற்போது 40.76 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 981 கனஅடி நீர் அணையின் 5 மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அணையில் இருந்து இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீரில் அதிகப்படியான அளவு ரசாயன நுரை காணப்படுகிறது. இந்த ரசாயன நுரை காற்றில் பறந்தும், சுற்றுப்புற பகுதிகளுக்கு பரவியும் வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.