சென்னை: 300 கிராம் கஞ்சா பறிமுதல் - பெண் உள்பட 6 பேர் கைது
சென்னை வியாசர்பாடியில் போதைப்பொருள் விற்பனை குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.;
சென்னை வியாசர்பாடியில் போதைப்பொருள் கடத்தல் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வியாசர்பாடியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான சிலர் சுற்றித்திரிவதை கண்டனர். அவர்களை மடக்கி போலீசார் நடத்திய சோதனையில் அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் 570 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இந்த போதைப்பொருட்களுக்கு தொடர்புடைய பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.