தினசரி சராசரியாக 6,300 டன் திடக்கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி

தூய்மைப் பணியில் பூங்காக்களில் காணப்பட்ட தேவையற்ற செடிகள், தாவரக் கழிவுகள், குப்பைகள் அகற்றப்பட்டு பூங்காக்கள் சுத்தம் செய்யப்பட்டது.;

Update:2026-01-06 15:25 IST

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 781 பூங்காக்களிலும் இன்று (06.01.2026) தீவிரத் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தினசரி சராசரியாக 6,300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் சராசரியாக நாளொன்றுக்கு 1000 மெட்ரிக் டன் கட்டட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

தூய்மைப் பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளும் நடவடிக்கையாக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பேருந்து நிறுத்தங்கள், சாலைகள், பாலங்கள், மயானபூமிகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், 05.01.2026 அன்று பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 1,373 பேருந்து நிறுத்தங்களிலும் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இன்று (06.01.2026) பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 781 பூங்காக்களிலும் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த தீவிரத் தூய்மைப் பணியில் பூங்காக்களில் காணப்பட்ட தேவையற்ற செடிகள், தாவரக் கழிவுகள், குப்பைகள் அகற்றப்பட்டு பூங்காக்கள் சுத்தம் செய்யப்பட்டது.

இந்தப் பணியினை கண்காணித்து சிறப்பாக மேற்கொள்ள உரிய பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களது மேற்பார்வையில் இந்த தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்