சென்னை மெட்ரோ ரெயிலில் நவம்பர் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை சரிவு

நடப்பு ஆண்டின் கடைசி 4 மாதங்களுடன் ஒப்பிடும்போது, நவம்பர் மாதத்தில் சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை சரிவடைந்து உள்ளது.;

Update:2025-12-03 08:39 IST

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் 92 லட்சத்து 86 ஆயிரத்து 753 பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். இதே போல, ஜூலை மாதத்தில் 1 கோடியே 3 லட்சத்து 78 ஆயிரத்து 835 பேரும், ஆகஸ்டு மாதத்தில் 99 லட்சத்து 9 ஆயிரத்து 632 பயணிகளும், செப்டம்பர் மாதத்தில் 1 கோடியே 1 லட்சத்து 46 ஆயிரத்து 769 பேரும், அக்டோபரில் 93 ஆயிரத்து 27 ஆயிரத்து 746 பேரும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.

அதிகபட்சமாக, நவம்பர் 10-ந்தேதி 3 லட்சத்து 60 ஆயிரத்து 342 பேர் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தியுள்ளனர். கடந்த மாதம் பயண அட்டையை பயன்படுத்தி 60 ஆயிரத்து 317 பேரும், கியூ-ஆர் குறியீடு பயணச்சீட்டை பயன்படுத்தி 43 லட்சத்து 77 ஆயிரத்து 951 பயணிகளும் பயணித்துள்ளனர். மேலும், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 48 லட்சத்து 48 ஆயிரத்து 485 பயணிகள் மெட்ரோ ரெயிலில் சென்றுள்ளளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டின் நவம்பர் மாதத்தில் சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை சரிவடைந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்