சிதம்பரம் கனகசபை விவகாரம்; கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறோம் - அமைச்சர் சேகர்பாபு

சிதம்பரம் கனகசபை விவகாரம் தொடர்பான கோர்ட்டு தீர்ப்பை வரவேற்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.;

Update:2025-02-22 17:52 IST

சென்னை,

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய கோர்ட்டு அனுமதித்திருப்பது வரவேற்கத்தக்கது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோவில் திருப்பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது;-

"இறைவன் முன்பு அனைவரும் சமம் என்ற வார்த்தைக்கு இன்று உயிர் கிடைத்துள்ளது. எனவே, கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறோம். பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வது புதிய நடைமுறை அல்ல.

இந்த போராட்டம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதை நிரூபிக்கும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி இருக்கும்."

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்