கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.;
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடன் நேருக்கு நேர் ஒன் டூ ஒன் முறையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதி நிர்வாகிளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு, ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது கோவை மாவட்டத்தில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றிபெற வேண்டுமென நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.