முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி பயணம்
கல்லணை டேம் சென்று மாலை 6.00 மணிக்கு டேமில் தண்ணீர் திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.;
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி செல்கிறார். நாளை 15.06.2025 காலை 10.40 மணிக்கு முதல்வர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு 11.00 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்று பின்பு 11.15 மணி பயணிகள் விமானத்தில் பயணம் செய்து 12.25 மணிக்கு திருச்சி விமான நிலையம் சென்று பின்பு அங்கிருந்து 12.45 மணிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு 1.45 மணிக்கு கல்லணை கெஸ்ட் ஹவுஸ் சென்று தங்குகிறார்,
பின்பு கல்லணை கெஸ்ட் ஹவுஸில் இருந்து புறப்பட்டு கல்லணை டேம் வந்து 6.00 மணிக்கு டேம் தண்ணீர் திறந்து வைத்த பின் 6.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் வந்து அங்கு கலைஞர் சிலையை திறந்து வைத்த பின் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை சர்க்யூட் ஹவுஸ் சென்று இரவு தங்குகிறார்,
மறுநாள் 16.06.2025 காலை அங்கிருந்து புறப்பட்டு 09.30 மணிக்கு மஹாராஜா மஹால் வந்து அங்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்பு அங்கிருந்து புறப்பட்டு 11.15 மணிக்கு ராஜா சரபோஜி அரசு கல்லூரி மைதானம் சென்று அங்கு மினி பஸ் போக்கு வரத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்த பின் 12.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை சர்க்யூட் ஹவுஸ் சென்று தங்குகிறார்,
மாலை 16.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 5.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்து 18.05 மணி பயணிகள் விமானத்தில் பயணம் செய்து 7.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து பின்பு அங்கிருந்து புறப்பட்டு 7.45 மணிக்கு இல்லம் வருகிறார்.