தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
கரூரில் நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 31 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.;
சென்னை,
கரூரில் இன்று நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்த நிலையில், நாளை காலை கரூருக்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் செல்ல உள்ளார். இதற்கிடையே சென்னை தலைமை செயலகத்தில் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலரின் நிலமை கவலைக்கடமாக இருப்பதாக சொல்லப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.