திருமாவளவனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
தெளிவான சிந்தனை கொண்ட சகோதரர் திருமாவளவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ஆழ்ந்த அறிவும் - தெளிவான சிந்தனையும் - உழைக்கும் மக்களின் நலன் காக்க உரமாகும் தியாக எண்ணமும் கொண்ட அருமைச் சகோதரர் - எழுச்சித் தமிழர் திருமாவளவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! லட்சியப் பயணத்துக்குத் துணையாக வரும் தாங்கள் மகிழ்ச்சியுடனும் உடல்நலனுடனும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.