ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் மையக் கட்டடம் - அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்
சந்திரயோகி சமாதி சாலையில் ரூ.32.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தினை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.;
சென்னை திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74 ல் குழந்தைகள் மையக் கட்டடம், பல்நோக்கு மையக் கட்டடம் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தினை அமைச்சர் சேகர்பாபு பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று (12.07.2025) திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74, சந்திரயோகி சமாதி சாலையில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குழந்தைகள் மையக் கட்டடத்தினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து, சந்திரயோகி சமாதி சாலையில் ரூ.32.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தினையும், சந்திரயோகி சமாதி சாலையில் ரூ.9.87 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடத்தினையும் அமைச்சர் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.