தேர்வு பயத்தால் 10ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை
குன்றத்தூரில் 10ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் . .;
சென்னை,
குன்றத்தூரில் தேர்வு பயத்தால் 10ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் . .
குன்றத்தூரை சேர்ந்த பாலாஜி என்பவரது மகள் திவ்யதர்ஷினி, அரசு மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார் . இந்த நிலையில், பெற்றோர் காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், மாணவி திவ்யதர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பொதுத்தேர்வு மற்றும் மதிப்பெண் குறைந்து விடும் என்ற அச்சத்தில் திவ்யதர்ஷினி தற்கொலை செய்துகொண்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.