கோவை: சாலையில் சரிந்து விழுந்த 8 மின் கம்பங்கள் - மக்கள் அதிர்ச்சி
உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.;
கோயம்புத்தூர்,
கோவையில் இன்று திடீரென பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கோவையின் மிக முக்கியமான மாநகர் பகுதியான காந்திபுரத்தில் உயர் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மொத்தம் 8 கம்பங்கள் தொடர்ந்து வரிசையாக சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே விபத்து குறித்து தவலறிந்த மின் துறையினர் உடனடியாக மின்சாரத்தை துண்டித்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்த மின் உழியர்கள் மின்கம்பங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.