ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்ட பதிவு

மாணிக்கம் தாகூர் வெளியிட்ட பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.;

Update:2026-01-07 04:36 IST

விருதுநகர்,

ஆட்சியில் பங்கு தொடர்பாக விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், சமூக வலைதளத்தில் வெளியிட்ட புதிய பதிவு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேட்டியை அவர் மேற்கோள்காட்டியுள்ளார்.

அந்த பேட்டியில் “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் சகோதரர்களைப் போல இருப்பவர்கள். முடிவுகளை அவர்கள் இருவரும் சேர்ந்து எடுப்பார்கள்” என்று ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பதை தாம் வரவேற்பதாக மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

அதே சமயம், ஆட்சியில் பங்கு குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை என ஆர்.எஸ்.பாரதி கூறியதை மறுத்துள்ள மாணிக்கம் தாகூர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் அளித்த பேட்டியின் பத்திரிகை செய்தியை பகிர்ந்துள்ளார்.

அந்த பேட்டியில், “ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்பது எனது விருப்பம் மட்டுமல்லாது, தொண்டர்களின் விருப்பமும் அதுவாகவே உள்ளது” என ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்