கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமான பணி - அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் பேரூரில் ரூ. 6.78 கோடி மதிப்பீட்டில், கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.;

Update:2025-07-24 20:42 IST

சென்னை,

அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை மாவட்டத்தின் குடிநீர் தேவையை தங்கு தடையின்றி பூர்த்தி செய்யும் விதமாக சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் பேரூரில் ரூ. 6 ஆயிரத்து 78 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில், கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட இந்த கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமான பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தேன். அப்போது, இந்த கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்.

இந்த ஆய்வின் போது, சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தி. சினேகா, மேற்பார்வை பொறியாளர் இ.சாந்தி, செயற்பொறியாளர் ஸ்.கிருபாகரவேல் ஆகியோருடன் அரசு உயர் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்