தமிழ்நாட்டின் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்த தொடர் நடவடிக்கை: உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறைக் கட்டமைப்பை மேம்படுத்திட தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .;
சென்னை ,
துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறைக் கட்டமைப்பை மேம்படுத்திட தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அந்த வகையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்க வளாகத்தில் ரூ.24.70 கோடி மதிப்பில் புதிய உயர் செயல்திறன் மாணவர் விடுதி, ரூ.3.49 கோடி மதிப்பில் நிழல் பன்முக விளையாட்டு வசதி, ரூ.2.49 கோடி மதிப்பில் பிரத்யேக எறிதல் மையம், ரூ.2.97 கோடி மதிப்பில் சென்னை முகப்பேர் விளையாட்டு வளாகத்தைப் புதுப்பிகும் பணி, SDAT கட்டுப்பாட்டில் உள்ள அறிஞர் அண்ணா நீச்சல் குளத்தை ரூ.2.47 கோடி மதிப்பில் பராமரிக்கின்ற பணி ஆகியவற்றுக்கும், மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.5.60 கோடி மதிப்பில் புதிய மாணவர் விடுதியை கட்டவும் இன்றைய தினம் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினோம். என தெரிவித்துள்ளார்.