ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் மறுப்பு

நாகேந்திரனை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.;

Update:2025-02-27 19:07 IST

சென்னை,

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரன், கல்லீரல் பிரச்சினை காரணமாக வேலூர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். நாகேந்திரனை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்கக்கோரி அவரது மனைவி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது, கல்லீரல் சிறப்பு மருத்துவர் அடங்கிய மருத்துவ குழுவை அமைத்து நாகேந்திரனை, பரிசோதித்து அறிக்கை அளிக்கும் படி சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த அறிக்கை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் தாக்கல் செய்யப்பட்டது. இதை பார்த்த நீதிபதி, நாகேந்திரனை சிகிச்சைக்காக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது தொடர்பாக மருத்துவர்கள் எந்த விவரத்தையும் அறிக்கையில் குறிப்பிடவில்லை எனக்கூறி நாகேந்திரன் மனைவியின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்