கடலூர்: கோவில் குளத்தில் புகுந்த முதலையை மீட்ட வனத்துறையினர்

சிதம்பரம் அருகே கோவில் குளத்தில் புகுந்த முதலையை வனத்துறையினர் மீட்டனர்.;

Update:2025-03-02 23:50 IST

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.வக்காரமாரி கிராமத்தில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோவிலின் குளத்தில் முதலை ஒன்று புகுந்ததாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், சுமார் 7 அடி நீளமும் 50 கிலோ எடையும் கொண்ட முதலையை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த முதலையை அதே பகுதியில் அமைந்துள்ள நீர் தேக்க ஏரியில் வனத்துறையினர் பாதுகாப்பாக விட்டனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்