தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை? அரசு விளக்கம்

வங்கக்கடலில் டித்வா புயல் உருவாகியுள்ளது;

Update:2025-11-28 19:54 IST

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு டிட்வா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் சென்னையில் இருந்து தெற்கில் சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

புயல் மணிக்கு 3 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், பல மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டித்வா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை, புயல் , கனமழை தொடர்பாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகமே முடிவு எடுத்து அறிவிக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்