டிட்வா புயல் எதிரொலி: கோடியக்கரையில் கடல் சீற்றம்
கோடியக்கரை, கடியன்விளை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.;
சென்னை,
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் இன்று காலை தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் நிலவியது. இந்த புயல் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் காலையில் நகர்ந்து வந்தது. நேரம் செல்ல செல்ல புயலின் நகரும் வேகம் குறைந்தது. கடந்த 6 மணி நேரமாக 5 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா சங்கமிக்கும் கோடியக்கரை பகுதியில், டிட்வா புயல் எதிரொலியாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. முன்னதாக கோடியக்கரை, கடியன்விளை உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. மேலும் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.