காவிரி ஆற்றில் செத்து மிதந்த மீன்கள் - மக்கள் அதிர்ச்சி

மேட்டூரில் காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-06-14 20:55 IST

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நேற்று முன்தினம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பு அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் போதுமான தண்ணீர் திறந்து விடப்படாததால் ஆங்காங்கே பாறைகளாக காட்சியளித்தது. ஒரு சில பகுதியில் மட்டும் தண்ணீர் ஓடை போல் காணப்பட்டது.

தற்போது மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேட்டூர் காவிரி பாலம் முதல் செக்கானூர் வரை காவிரி ஆற்றில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தது.

மேலும் ¾ கிலோ எடை வரை உள்ள மீன்கள் குவியல், குவியலாக கரை ஓரங்களில் மயங்கிய நிலையில் மிதந்தன. இதை அறிந்த அப்பகுதி காவிரி கரையோர பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து சென்று தண்ணீரில் மிதந்த மீன்களை அள்ளி சென்றனர். இந்த மீன்கள் செத்தது மற்றும் மயங்கி கிடந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்