அவதூறு பேச்சு: கோவை கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்

வழக்கை அடுத்த மாதம் 17-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.;

Update:2025-06-18 01:15 IST

கோப்புப்படம் 

கோவை,

பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீதும், பெலிக்ஸ் ஜெரால்டு என்பவர் மீதும் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அவர்கள் 2 பேரும் கைது செய்யப் பட்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டு ஜாமீனில் விடுதலை ஆனார்கள். பெண் போலீசார் குறித்து பேசியது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் கோவை சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கோவை போலீசார் பதிவு செய்த வழக்கில் கோவை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கை அடுத்த மாதம் 17-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி அருண்குமார் உத்தரவிட்டார்.

 

Tags:    

மேலும் செய்திகள்