மெரினா வான்சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த விவகாரம்: டி.ஜி.பி. விளக்கம் அளிக்க உத்தரவு
மெரினா வான்சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி. விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.;
சென்னை
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த வான் சாகச நிகழ்ச்சியின் போது நெரிசலில் சிக்கியும், மயக்கம் அடைந்தும் 5 பேர் உயிரிழந்தனர்.மேலும், 250-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர். போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படாததால் இந்த துயர சம்பவம் நடந்ததாக கூறி உலக மனித உரிமைகள் ஆணைய மற்றும் மீட்பு மையத்தின் தலைவர் வக்கீல் எஸ்.கே.சாமி தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், இதுதொடர்பாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஆணையம், இதுதொடர்பாக டி.ஜி.பி. 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.