சென்னையில் பள்ளி சிறுமியை, வடமாநில தொழிலாளி கடத்தினாரா? தமிழக அரசு விளக்கம்
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவிற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.;
சென்னை,
சென்னையில் வடமாநில தொழிலாளி ஒருவர் பள்ளி சிறுமியை கடத்தி செல்வதாக கூறி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி சமூக வலைத்தளங்கில் வேகமாக பரவிவருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், " இந்த வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்திய அளவில் இந்த வீடியோ பரவி வருகிறது. இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்று தமிழக போலீசும் மறுத்துள்ளது. தவறான தகவலை பரப்பவேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.