கணவருடன் தகராறு: பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2025-06-20 21:59 IST

கோப்புப்படம் 

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நெருப்பூரை சேர்ந்த முனுசாமி மகள் சுகன்யா (34 வயது) என்பவருக்கும், ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த முத்து என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள்.

இதற்கிடையே கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. சுகன்யா கணவரை பிரிந்து தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே தாய் வீடான நெருப்பூருக்கு வந்தார். தன்னுடைய மகளையும் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பில் சேர்த்து விட்டார்.

இதற்கிடையே முத்துவுக்கும், சுகன்யாவுக்கும் செல்போனில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சுகன்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்