செல்போன் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்
அரசுப் பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசியபடி பேருந்தை இயக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.;
திருப்பூர் குன்னத்தூரிலிருந்து பெருமாநல்லூர், புதிய பேருந்து நிலையம் வழியாக திருப்பூர் பழைய பேருந்து நிலையம் சென்ற 45பி எண் கொண்ட அரசுப் பேருந்தை தாமரைக் கண்ணன் என்பவர் இயக்கினார். அவர் பேருந்து ஓட்டிக் கொண்டிருந்தபோது, செல்போன் பேசியுள்ளார். மேலும் ஆபத்தான முறையில் ஸ்டியரிங்கில் இருந்து இரண்டு கைகளையும் விட்டுவிட்டு செல்போனில் ஹெட்செட்டை மாட்டியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், பேருந்தை இயக்கிய தாமரைக் கண்ணனை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருப்பூர் மண்டலம் உத்தரவிட்டுள்ளது.