அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

வாக்காளர் பட்டியல்களை ஒப்பிடும் பணியை செப்.26க்குள் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.;

Update:2025-09-12 15:22 IST

சென்னை,

வாக்காளர் பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்கள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் வெளியான வாக்காளர் பட்டியலுடன் தற்போது உள்ள பட்டியலை ஒப்பிட்டு வேறுபாடுகளை சரி செய்யும் திருத்தப் பணி நடைபெறுகிறது.

இந்த பணியை செப்டம்பர் 26ம் தேதிக்குள் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரி வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்