சென்னையில் அமலாக்கத்துறை சோதனை

சட்ட விரோத பணபரிமாற்ற புகார் தொடர்பாக பிரபல தனியார் மருந்து நிறுவனத்தில் சோதனை நடப்பதாக சொல்லப்படுகிறது.;

Update:2025-05-06 08:00 IST

சென்னை,

சென்னையில் சுமார் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, விருகம்பாக்கம் சாலிகிராமம், தி. நகர், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவ உபகரண நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளருக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்