ஈரோடு: தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம் - போக்குவரத்து பாதிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.;

Update:2025-10-22 18:04 IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சிக்கள்ளி தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் வழியில் வள்ளியம்மன் கோவில் அருகே பாறைகள் உருண்டு சாலையில் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்