தூத்துக்குடியில் நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்
தூத்துக்குடியில் நாளை நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் அனைவரும் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.;
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
2025-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.10.2025, வியாழன்கிழமை அன்று காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.